வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்

விருதுநகரில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-13 15:09 GMT
உண்ணாவிரத போராட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவலாகத்தினுள் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் முன்பு மாவட்டதலைவர் கோதண்டராமன் தலைமையில், துணை வட்டாட்சியர் பரல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும்,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்திட வேண்டும்,

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் உள்ள பயன்பாட்டிற்கு தகுதியற்ற ஈப்புகளை கழிவு செய்து அவற்றிற்கு ஈடாக புதிய ஈப்புகளை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்ட முழக்கங்களை எழுப்பி இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News