தூத்துக்குடி வழக்கு விசாரணைக்கு அழைத்து சென்று திரும்பும்போது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி மற்றும் பிரபல ரவுடி ஹை கோர்ட் மகாராஜாவை தூத்துக்குடி தனிப்படை காவல்துறையினர் நான்கு மாதங்களுக்கு பிறகு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-07-31 10:16 GMT
தூத்துக்குடி வழக்கு விசாரணைக்கு அழைத்து சென்று திரும்பும்போது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதி மற்றும் பிரபல ரவுடி ஹை கோர்ட் மகாராஜாவை தூத்துக்குடி தனிப்படை காவல்துறையினர் நான்கு மாதங்களுக்கு பிறகு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் கைது செய்யப்பட்ட ஐகோர்ட் மகாராஜாவிடமிருந்து துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தூத்துக்குடியை சேர்ந்தவர் ஐகோர்ட் மகாராஜா இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன இதைத்தொடர்ந்து விளாத்திகுளத்தில் நடைபெற்ற ஒரு கொலை முயற்சி வழக்கு தொடர்பாக இவர் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்காக பேரூரணி சிறையில் இருந்து ஆயுதப்படை காவல்துறையை சேர்ந்த பெண் காவலர் உள்ளிட்ட இருவர் பாதுகாப்புடன் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக கடந்த 5/3/24காலை பேருந்தில் அழைத்து சென்றுள்ளனர் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு பின்னர் 5/3/24 மாலை பேருந்து மூலம் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு ஐகோர்ட் மகாராஜாவை காவல்துறையினர் பாதுகாப்புடன் கூட்டி வந்துள்ளனர் பின்னர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் வந்து பின்பு மினி பேருந்து மூலம் பழைய பேருந்து நிலையம் செல்வதற்காக புதிய பேருந்து நிலையத்திருந்து நடந்து செல்லும் போது கைதி ஐ கோர்ட் மகாராஜா தான் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை பாதுகாப்புக்கு வந்திருந்த காவல்துறையினரின் கண்ணில் தூவி விட்டு தப்பி ஓடி உள்ளார் இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்நிலையில் காவல்துறையினர் அவரை தேடி வந்தனர் இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் சிறுவன் ஒருவனை 2 கோடி ரூபாய் கேட்டு ஆட்டோவில் கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு ஹை கோர்ட் மகாராஜாவை காவல்துறையினர் தேடி வந்தனர் இதைத்தொடர்ந்து ஹைகோர்ட் மகாராஜாவை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் கீழ் தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படை காவல்துறையினர் தலைமறைவாக இருந்த கைதியும் பிரபல ரௌடியுமான ஹைகோர்ட் மகாராஜாவை கோயம்புத்தூரில் வைத்து நேற்று கைது செய்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் கைது செய்யப்பட்ட ஐகோர்ட் மகாராஜாவிடமிருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Similar News