தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய 442வது ஆண்டு திருவிழா மாநகரின் முக்கிய வீதிகளில் சப்பர பவனி நடைபெற்றது இதில் சாதி, மதம், இன பாகுபாடின்றி லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம் உலக புகழ்பெற்றதாகும் இந்த ஆலயம் இத்தாலி ரோம் நகரில் அமைந்துள்ள வாடிகன் சிட்டியால் பசிலிகா அந்தஸ்து வழங்கப்பட்ட பேராலயம் ஆகும். இந்த ஆண்டு 442வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் ஜெபமாலை, மறையுரை, அருளிக்க ஆசீர், நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான பெருவிழா இன்று நடைபெற்றது காலை ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெற்றது இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் சாதி, மதம், இன பாகுபாடின்றி லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். திருவிழவையொட்டி பேராலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தது. விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் 1000 போலீஸ் பாதுகாப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.