கிளாப்பாளையம் கிராமத்தில், கூலித்தொழிலாளியின் நிலம் கணினி சிட்டாவில் நிலத்தில் அளவு குறைந்ததால், அதை சரிசெய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் தி.கோடு ஆர்.டி.ஓ., அலுவலகம் நோக்கி 14 கிலோ மீட்டர் தொலைவு நடைபயணம் மேற்கொண்டனர்.

Update: 2024-08-09 12:02 GMT
எலச்சிபாளையம் ஒன்றியம், கிளாப்பாளையம் கிராமம், கருக்கூர் பகுதியை சேர்ந்தவர் சக்கிவேல். ரிக்வண்டியில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமாக, அப்பகுதியில் 12சென்ட் நிலம் உள்ளது. அரசு வழங்கிய கணினி சிட்டாவில் மூன்று சென்ட் அளவு குறைவாக உள்ளது. இதனை சரிசெய்யக்கோரி, கடந்த 2023 ஆக.9 அன்று, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.,விடம் மனுஅளித்தார். இதுவரையில் மனுமீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆர்.டி.ஓ.,விடம் மனுஅளித்து ஓராண்டு ஆகிவிட்டதால், நேற்று காலை 10மணியளவில், மீண்டும் தி.கோடு ஆர்.டி.ஓ.,விடம் மனுஅளிப்பதற்காக, எலச்சிபாளையம் மார்க்சிஸ்டு கம்யூ.,கட்சியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரமேஷ், கிட்டுசாமி, ஈஸ்வரன், மூத்த நிர்வாகி சுந்தரம், சிங்காரவேல், மோட்டார் சங்க மாவட்ட பொருளாளர் சக்திவேல் உள்பட பலர் நடைபயணமாக, கிளாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலம் துவங்கி கொட்டங்காடு, 85கவுண்டம்பாளையம், உஞ்சனை பஸ்நிறுத்தம், குமரமங்கலம் வி.ஏ.ஓ., அலுவலகம் வந்தபின்னர், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கணினியில் திருத்தம் செய்து முறையான சிட்டாவை அதிகாரிகள் வழங்கினர்.

Similar News