கிளாப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சாலை விபத்தில் பலியானார்.

Update: 2024-08-10 13:15 GMT
எலச்சிபாளையம் யூனியன், கிளாப்பாளையம் கிராமம், காட்டுசாலை பகுதியை சேர்ந்தவர் பொன்னாகவுண்டர் மகன் ஜெயராமன்53. கிளாப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் இரவு 9;20மணியளவில் ராயர்பாளையத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு யமாகா ரே இருசக்கர வாகனத்தில் கிளாப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிற்கு செல்லும் வழியில் தனியார் கிரானைட் நிறுவனம் அருகில் வளைவு சாலையில் வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் சாலை ஓரத்தில் இருந்த குழியில் விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசு மருத்துவனையில் சேர்த்துள்ளனர். பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இவருக்கு, செல்வமணி51 என்ற மனைவியும், மோகன்30 என்ற ஒரு மகனும் உள்ளனர். ஊராட்சிமன்ற தலைவர் விபத்தில் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது, பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Similar News