பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என புதுச்சேரி மாநில முன்னாள் முதல் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராணசாமி சுவாமி தரிசனம் செய்தார். கோவிலில் மூலவர், சண்முகர் உள்ளிட்ட அனைத்த சன்னதிகளிலும் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து விருந்தினர் மாளிகையில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் புதுச்சேரியில் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை என்றும் புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுவருவதாக குற்றம்சாட்டினார். மேலும் புதுச்சேரியில் நடைபெறும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி போல மத்தியில் மோடி ஆட்சி மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஆட்சியாக உள்ளதாகவும் பேசிய அவர் ராகுல்காந்தி பிரதமராக வரவேண்டும் என மக்கள் கங்கனம் கட்டிக்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவரிடம் சினிமாத்துறையில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டு குறித்த பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் சினிமாத்துறையில் நடைபெறும் பாலியல் குற்றச்சாட்டு பற்றி தனக்கு தெரியாது என்றார். மேலும் பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டுகளுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்றும் பெண்களுக்கான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து அனைவரும் கேள்வி கேட்க வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் காவல்துறையினர் முனைப்புடன் செயல்படவேண்டும் என்றும் காவல்துறையினர் முனைப்புடன் செயல்பட்டால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் எம்ஜிஆர், என்.டி.ஆர் தவிர மற்ற நடிகர்கள் அரசியர் கட்சி தொடங்கி ரொம்பகாலம் நீடித்ததில்லை என்றும் அரசியல் வாழ்கையில் அவர்கள் பயணித்ததில்லை நடிகர்கள் ஒரு சில சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றாலும் கூட காணாமல் போய்விடுவார்கள் என்பதே சரித்திரமாக உள்ளது ஆதலால் நடிகர்கள் கட்சி தொடங்குவது குறித்து அச்சப்பட தேவையில்லை என்ற அவர் நடிகர்களையும் பணைத்தையும் பார்த்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் நல்ல திட்டங்களை வைத்தே மக்கள் வாக்களிப்பார்கள் என்றார். மேலும் புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமியை பாஜக அரசு வைவிட்டு விட்டதாகவும் ஆதலால் நடிகர் விஜயோடு சேர்ந்தால் கரை சேரலாம் என நினைப்பதாகவும் அதன் விளைவாகவே அவர் நடிகர் விஜயின் கட்சி மாநாட்டில் கலந்துகொள்வதாக தகவல் வருகிறது என்றும் அவர் கட்சி மாறும் வேலையை செய்துவருவதாகவும் அவர் கடும் விமர்சனம் செய்தார்.