கடையநல்லூர் முப்புடாதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது
முப்புடாதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்லகநாடி அம்மன், ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவிலில் இன்று நகர வியாபாரிகள் & கடைக்காரர்கள் சார்பில் மிகச்சிறப்பாக கோவில் கொடை விழா ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சியில் பரதம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.