மறியலில் ஈடுபட்ட 78 பேர் மீது வழக்குபதிவு
பென்னாகரம் அருகேமுன் அனுமதி பெறாமல் மறியலில் ஈடுபட்ட 78 பேர் மீது ஏரியூர் காவலர்கள் வழக்கு பதிவு
தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே ஊர்நத்தம் கிராமத்தில் செல்போன் டவர் இல்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பல்வேறு தரப்பினரிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. நேற்று, ஊர்நத்தம் பஸ் நிறுத்தம் அருகே, சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி வைத்து, மறியல் போராட்டம் நடத்தினர். இதுகுறித்த தகவல் அறிந்த தொன்னகுட்லஹள்ளி விஏஓ செந்தில்குமார், ஏரியூர் காவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். உயர் அதிகாரிக ளிடம் இதுபற்றி தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து சமாதானமடைந்த மக்கள், போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏரியூர் போலீசார், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் மறியல் செய்த கிருஷ்ணமூர்த்தி, வீராசாமி, நவீன்குமார், கவிதா, அய்யம்பெருமாள், சதீஸ், மாதை யன், மணிமேகலை, கோபி, மாது, செந்தில், கோவிந்தராஜ், புவனேஷ்வரி, சின்னகுட்டி உள்ளிட்ட 78 பேர் மீது இன்று வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.