நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி பாஸ்கர் அவர்களின் அன்பு மாப்பிள்ளை திலீப் அ.இ அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியினை நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் இக்கட்சியினை துவக்கி வைத்தார் இதனைத் தொடர்ந்து இக்கட்சிக்கு இளைஞர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது இந்நிலையில் மாற்றுக் கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகிறார்கள் இதற்கு காரணமாக அவர்கள் கூறுவது என்னவென்றால் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் மக்களின் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு இருப்பதாக கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி கட்சியின் மாநாடு விக்கிரவாண்டியில் நடக்க இருப்பதை அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நிறைய தொண்டர்கள் தங்களை தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகிறார்கள் அந்த வகையில் நாமக்கல்லை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே பி பி பாஸ்கர் அவரின் அன்பு மாப்பிள்ளை திலீப் அவர்கள் அ.இ அதிமுகவிலிருந்து விலகி தன்னை தமிழக வெற்றி கழகத்தில் இணைத்துக் கொண்டார் மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புதிய ஆனந்தை திலீப் அவர்கள் நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக பேசியுள்ளார்.