பாளையம்பட்டி சிலோன் காலனியில் கடந்த டிசம்பர் 3 ம் தேதி ஒரே நாள் இரவில் நான்கு இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட வழக்கில் நான்கு பேரை கைது செய்த போலீசார்; 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல்*
அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி சிலோன் காலனியில் கடந்த டிசம்பர் 3 ம் தேதி ஒரே நாள் இரவில் நான்கு இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட வழக்கில் நான்கு பேரை கைது செய்த போலீசார்; 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனம் பறிமுதல் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டி ஊராட்சி சிலோன் காலனி பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். இவர் கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். பின்னர் மீண்டும் காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அதே பகுதியில் மாரிச்செல்வம், கவியரசு மற்றும் ஒரு நபரின் இருசக்கர வாகனத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். மேலும் ஒரு இருசக்கர வாகனத்தை திருட முடியாததால் அங்கேயே நிறுத்திவிட்டு சென்றுள்ளனர். மங்கி குல்லா அணிந்த மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடி சென்றதாக இருசக்கர வாகனத்தை பறி கொடுத்தவர்கள் தெரிவித்தனர். இந்த இருசக்கர வாகனம் திருட்டு தொடர்பாக அருப்புக்கோட்டை நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது மதுரையில் மதுரையை சேர்ந்த வினோத்குமார்(26) என்பவரை போலீசார் ஒரு குற்ற வழக்கில் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆண்டிபட்டியை சேர்ந்த சிதம்பரம்(24), தஞ்சாவூர் மாவட்டம் வாழமீரான் கோட்டையைச் சேர்ந்த அய்யப்பன்(28) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(20), விமல்(19) ஆகியோருடன் சேர்ந்து அருப்புக்கோட்டையில் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. அருப்புக்கோட்டை டவுன் போலீசார் இவர்கள் நான்கு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை கடத்தி செல்வதற்கு பயன்படுத்திய ஒரு சரக்கு வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்