தென்காசி தெற்கு மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியில் அதிமுக நிறுவனத் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர். 108வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி. பிரபாகரன், தென்காசி தெற்கு மாவட்ட மாவட்ட அவைத் தலைவர் இலஞ்சி எஸ்.கே. சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக இணைச் செயலாளர் முத்துலெட்சுமி, மாவட்ட துணை செயலாளர் பசுவதி, மாவட்ட அதிமுக பொருளாளர் சாமிநாதபாண்டியன், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கசமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர். கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அமல்ராஜ் வரவேற்புரையாற்றினார். மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் குணம் (எ) உத்திரகுணபாண்டியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன், திமுக தலைமைக் கழக பேச்சாளர் தீப்பொறி முருகேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முடிவில் மாவட்ட மாணவரணி பொருளாளர் சேர்மபாண்டி அனைவருக்கும் நன்றி கூறினார்.