வேலைதேடும் இளைஞர்கள்; https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்து தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களுக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பினை பெற இயலும்- மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன். தகவல்;
தமிழக அரசு வேலைதேடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு வேலைவாய்;ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம் ஒன்றை உருவாக்கியுள்ளது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு இணையத்தில், இதுவரை மாநில அளவில் 725 தனியார் துறை நிறுவனங்கள் 43 துறைகளில், 31,553 பணிக்காலியிடங்களை இதுவரையில் உள்ளீடு செய்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தினை பொறுத்தமட்டில் 146 தனியார் துறை நிறுவனங்கள், 19 துறைகளில், 2128 பணிக்காலியிடங்களை உள்ளீடு செய்துள்ளன. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள்; https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்து தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களுக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பினை பெற இயலும். மேலும் விவரங்களுக்கு விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் 93601-71161 எண்ணை தொலைபேசி வாயிலாக தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.