குற்ற சம்பவங்களை தடுக்க வாகன சோதனை தீவிரம்
குற்ற சம்பவங்களை தடுக்க காங்கேயம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனை தீவிரம்;
காங்கேயத்தை அடுத்த அவினாசிபாளையம் பகுதியில் நகை அதிபரிடம் பணம் பறிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கேயம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காங்கேயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் வாகனச் சோதனை மேற்கொள்ளப் பட்டது. அப்போது சந்கேதத்திற்கு உரிய வாகனங்கள் மற்றும் முறையான உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மாலை தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, முத்தூர் சாலை ஆகிய பகுதிகளில் வழக்கமான இடமில்லாமல் மாற்று இடங்களில் வாகன சோதனையை நடத்தி வருகின்றனர். மேலும் காங்கேயம் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக்குமார் தலைமையில் காங்கேயம் புறநகர் பகுதியிலும், ஊதியூரிலும் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.