
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள லாட்டரி விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில், ஈரோடு பவானி போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பவானி, காமராஜ் நகரில் உள்ள டீ கடை ஒன்றின் முன்பு வெளி மா நில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.அதில், அவர் அதேபகுதியை சேர்ந்த மணிகண்டபிரபு (33) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும், அவரிடமிருந்து வெளி மா நில லாட்டரி சீட்டுகள் 10, ஒரு செல்போன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.