தற்கொலை
அரச்சலூர் அருகே தேங்காய் வெட்டும் தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை;

ஈரோடு மாவட்டம், அறச்சலூர், ஓடா நிலை, தெற்கு தெருவை சேர்ந்தவர் சேகர் (45). தேங்காய் வெட்டும் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் அவருக்கு அடிக்கடி கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது.இதற்காக சிகிச்சை பெற்றும் வந்துள்ளார். நோய் பாதிப்பு காரணமாக கடந்த 3 நாட்களாக மன உளைச்சலில் இருந்த சேகர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில், அறச்சலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.