கோவில்பட்டியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா திருத்தேரோட்டம்; அமைச்சர்கள் சேகர்பாபு கீதா ஜீவன், துரைவைகோ, எம்பி பங்கேற்பு;
கோவில்பட்டியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா திருத்தேரோட்டம்; அமைச்சர்கள் சேகர்பாபு கீதா ஜீவன், துரைவைகோ, எம்பி பங்கேற்பு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.. நாள்தோறும் விழாவினை முன்னிட்டு சுவாமி அம்பாள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விழாவின் முக்கிய சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் மேளதாளம் முழங்க இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதன் பின்னர் மேளதாளம் முழங்க பக்தர்களின் கரகோஷங்கள் இடையே திருத்தேரோட்டம் தொடங்கியது . திருத்தேரோட்டத்தை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர கீதா ஜீவன், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைவைகோ , தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், இந்து அறநிலையத்துறை ஆணையாளர் ஸ்ரீதர், இணை ஆணையாளர் அன்புமணி, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜூ, ஆகியோர் திருத்தேரோட்டத்தை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். முதலில் அம்பாள் தேரும், இரண்டாவதாக சுவாமி தேரும் நான்கு ரத வீதிகளை வலம் வந்தது. இந்த தேரோட்டத்தில் தூத்துக்குடி திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, மற்றும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.