தூத்துக்குடி இன்று நள்ளிரவு முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் துவங்குவதை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் அனைத்தும் கரை திரும்பின தூத்துக்குடி, தருவை குளம், வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் கரையில் நிறுத்திவைப்பு;
தூத்துக்குடி இன்று நள்ளிரவு முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் துவங்குவதை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற விசைப்படகுகள் அனைத்தும் கரை திரும்பின தூத்துக்குடி, தருவை குளம், வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் கரையில் நிறுத்திவைப்பு மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 14ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் துவங்குகிறது இதையொட்டி தமிழக முழுவதும் கடலோர மாவட்டங்களில் விசைப்பகடகுகள் மீன்பிடிக்க மீன்வளத்துறை தடை விதித்துள்ளது இதையொட்டி ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த விசைப்படகுகள் அனைத்தும் இன்று கரை திரும்பின இதைத்தொடர்ந்து தருவைக்குளம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் அனைத்தும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன இதேபோன்று தூத்துக்குடி விசைப்படகு மீன் பிடி துறைமுகம் வேம்பார் மீன்பிடித் துறைமுகம் ஆகியவற்றிலும் விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 600 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன இதன் காரணமாக சுமார் 20,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்