சேலம் குகை திருச்சி மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜன் தலைமையில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த முகமது ரபீக் (வயது 40), புரோக்கர்களான ராஜேந்திரன் (58) மற்றும் ஒரு பெண் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டில் இருந்த 2 பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.