பெங்களூருவில் இருந்து சென்னைக்கு காரில் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக வாலாஜா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வாலாஜாவை அடுத்த சென்னசமுத்திரம் டோல்கேட் அருகில் தனிப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் காருடன் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஹடமத்தாசிங் (வயது 26), பிருஷா (26) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.