தூத்துக்குடி வைகாசி மாத கடைசி சுப முகூர்த்த தினம் என்பதால் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் இன்று 31 திருமணங்கள் நடைபெற்றது இதன் காரணமாக ஆலய வளாக முழுவதும் புதுமண தம்பதிகள் மற்றும் திருமண வீட்டாரின் கூட்டத்தால் நிறைந்து திருவிழா கோலம் போல காணப்பட்டது.;

Update: 2025-06-08 07:06 GMT
தூத்துக்குடி வைகாசி மாத கடைசி சுப முகூர்த்த தினம் என்பதால் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் இன்று 31 திருமணங்கள் நடைபெற்றது இதன் காரணமாக ஆலய வளாக முழுவதும் புதுமண தம்பதிகள் மற்றும் திருமண வீட்டாரின் கூட்டத்தால் நிறைந்து திருவிழா கோலம் போல காணப்பட்டது இன்று வைகாசி மாத வளர்பிறை கடைசி சுப முகூர்த்த தினம் இதையொட்டி தூத்துக்குடியில் அமைந்துள்ள பாகம்பியால் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் 31 திருமணங்கள் நடைபெற்றன புதுமண தம்பதிகள் திருமணத்தை பதிவு செய்து பின்பு சுப்பிரமணியர் சன்னதி முன்பு தாலி கட்டி மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர் இன்று ஒரே நாளில் 31 திருமணங்கள் நடைபெற்றதால் ஆலய வளாகம் முழுவதும் புதுமண தம்பதிகள் மற்றும் திருமண வீட்டார் மற்றும் உறவினர்கள் கூட்டத்தால் நிறைந்து காணப்பட்டது புத்தாடை அணிந்து மேளதாளம் முழங்க இந்த திருமணங்கள் நடைபெற்றதால் திருவிழா போல தூத்துக்குடி சிவன் கோவில் பகுதி வளாகம் முழுவதும் காணப்பட்டது

Similar News