தமிழக முதல்வராக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பார் என அதிமுக மாநில அமைப்பு செயலாளரும் குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான என் சின்னத்துரை நம்பிக்கை.;
குமரி மாவட்டத்தில் அனைத்து 2026 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழக முதல்வராக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பார் என அதிமுக மாநில அமைப்பு செயலாளரும் குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான என் சின்னத்துரை நம்பிக்கை. தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அதிமுக பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டம் ஆற்றூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.இந்த கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்ஷன் தலைமை தாங்கினார் மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், துணை செயலாளர் மேரி கமலபாய், இணை செயலாளர் அல்போன்சாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் சலாம் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக அதிமுக மாநில அமைப்பு செயலாளரும் குமரி மேற்கு மாவட்ட பொறுப்பாளருமான என்.சின்னத்துரை கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியது ஒவ்வொரு பூத்துக்கும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் பூத்தில் இருக்க வேண்டும் இதுவரைக்கும் நடந்த பூத்பொறுப்பாளர்கள் கூட்டத்தை விட தற்போது நடைபெற்ற கூட்டத்தில் தான் அதிக நிர்வாகிகள் கலந்துக் கொண்டதை பார்க்க முடிகிறது.குமரி மேற்கு மாவட்டத்தில் அதிமுகவினர் தற்போது எழுச்சியுடன் காணப்படுகின்றனர். குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளிலும் 818 பூத்துக்கள் உள்ளன ஒவ்வொரு பேருராட்சிகளிலும் 10 பூத்துகளாக பிரித்து பூத் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும் குமரி மாவட்டத்தில் அதிமுக பாஜக கூட்டணிக்கு 6 சட்டமன்ற தொகுதிகளில் 5 தொகுதிகளை இந்த கூட்டனி வெற்றி பெறும் என்று சர்வே எடுத்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் புதியதாக விளையாட்டு வீரர்களை கொண்ட விளையாட்டு அணி உருவாக்கப்பட்டுள்ளது இந்த அணிக்கு விரைவில் நிர்வாகிகள் நியமிக்கப்பட இருக்கிறது. விரைவில் பூத் பொறுப்பாளர்களுக்கு தலைமை கழகம் மூலம் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் அதற்காக அனைத்து நிர்வாகிகளும் முழு மூச்சாக செயல்பட வேண்டும். என்றார். தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடியார் மீண்டும் பதவி ஏற்க இருக்கிறார். தற்போது மாநகராட்சி, நகராட்சி, பகுதியில் குடிநீர் கட்டணம், சொத்துவரி, வீட்டு வரி ஆகியவற்றை அதிகமாக உயர்த்தி மக்களின் தலையில் வைத்து விட்டார்கள் விலைவாசி மிக அதிகமாக உயர்ந்து விட்டது என குற்றம் சாட்டிய என் சின்னத்துரை வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அணி செயலாளர்கள் மனோ, சக்கீர்உசேன், ரெஞ்சித்குமார், ஷைன் ஜோஸ், யூஜின், மஹாஜி செல்வகுமார், அருள்பிரகாஷ் சிங், ஜாண்,ராஜாபீட்டர், மாவட்ட பொருளாளர் சில்வஸ்டர், ஒன்றிய செயலாளர்கள் நிமால், ஜார்ஜ், மணி, மெர்லின்ட்தாஸ், நகர செயலாளர்கள் மணிகண்டன், .அழகுராஜா, மற்றும் பேரூராட்சி, ஊராட்சி பூத் பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.