தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுகள் இன்று மாவட்டம் முழுவதும் 101 இடங்களில் 127 தேர்வு மையங்களில் 37,005 தேர்வர்கள் தேர்வை எழுத உள்ளனர் தேர்வை கண்காணிக்க 31 நடமாடும் குழுக்கள் 14 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது;

Update: 2025-07-12 05:51 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுகள் இன்று மாவட்டம் முழுவதும் 101 இடங்களில் 127 தேர்வு மையங்களில் 37,005 தேர்வர்கள் தேர்வை எழுத உள்ளனர் தேர்வை கண்காணிக்க 31 நடமாடும் குழுக்கள் 14 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையின் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுகள் கிராம நிர்வாக அதிகாரி இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தேர்வு இன்று நடைபெறுகின்றன தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, ஏரல், ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், எட்டயபுரம் ,விளாத்திகுளம் திருச்செந்தூர் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் 101 இடங்களில் 127 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது தூத்துக்குடி மாவட்டத்தில் குரூப் 4 தேர்வை எழுத 37, 005 தேர்வர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர் தேர்வு மையங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன தேர்வை கண்காணிப்பதற்காக 31நடமாடும் குழுக்கள் மற்றும் 14 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது மேலும் தேர்வு மையங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Similar News