நிலத்தைச் சுற்றிய தகராறில், சித்தப்பா ஒருவர் தனது சகோதரியின் மகள்மீது கற்கள் வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2025-07-18 17:04 GMT
கோவை, வடவள்ளி அருகே சோமையம்பாளையம் பகுதியில் நிலத்தைச் சுற்றிய தகராறில், சித்தப்பா ஒருவர் தனது சகோதரியின் மகள்மீது கற்கள் வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சிகள் செல்போனில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. பொங்கியமாளுக்கு சொந்தமான 10 சென்ட் நிலத்தில் கம்பிவேலி அமைக்கும் பணியில் இடையூறு விளைவித்த அவரது சகோதரர் ரங்கநாதன், தகராறு எழுந்த நிலையில் கற்பகம் என்ற அவரது மகள்மீது கற்கள் வீசி தாக்கினார். தாக்குதலில் காயமடைந்த கற்பகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், இதை நிலத் தகராறு எனக் கூறி போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Similar News