பிரச்சனைக்குரிய நிலத்தை விற்று 28 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் மீது வழக்கு பதிவு.;
ஊட்டியை சேர்ந்தவர் விக்ரம். இவருடைய மனைவி பானு பிரியா (வயது 35). இவர்கள் சொந்தமாக நிலம் வாங்க பல இடங்களை தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து துடியலூர் அருகே ரூ.28 லட்சம் கொடுத்து வீட்டுமனை வாங்கினர். அதன்பிறகு அந்த நிலத்தின் மீது பிரச்சினை இருப்பது தெரியவந்தது. உடனே அந்த தம்பதி, தங்களுக்கு நிலம் கொடுத்த கனகராஜ், சண்முகம், வினோத் ஆனந்த் ஆகியோரிடம், எங்களை ஏன் ஏமாற்றினீர்கள் என்று கேட்டனர். அதற்கு அவர்கள் பணத்தை திரும்ப கொடுத்து விடுவதாக கூறியதாக தெரிகிறது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் அவர்கள் பணத்தை திரும்ப கொடுக் ரூவில்லை. இந்த குறித்த புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கனகராஜ், சண்முகம், வினோத் ஆனந்த் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.