Update: 2025-07-31 15:37 GMT
அருப்புக்கோட்டை அருகே மடத்துப்பட்டி கிராமத்தில் ஆளில்லாத வீட்டை நோட்டம் பார்த்து தங்க நகைகள், வெள்ளி கொலுசுகள், எல்இடி டிவி திருட்டு; மர்ம நபர்களுக்கு திருச்சுழி காவல் நிலைய போலீசார் வலைவீச்சு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் என்பவர் மனைவி முத்துமாரி(54). கணவர் இறந்து விட்டதால் முத்துமாரி தனது மகன்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு சுரேஷ் குமார் மற்றும் சதீஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் சென்னையில் வேலை செய்து வருகின்றனர். மடத்துப்பட்டியில் உள்ள வீட்டில் முத்துமாரியும் அவரது மூத்த மருமகள் மட்டும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் முத்துமாரி சொந்த வேலையாக வெளியூர் சென்ற நேரத்தில் அவரது மருமகளும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் வீடு பூட்டி கிடந்துள்ளது. வீட்டில் ஆளில்லாமல் பூட்டி கிடப்பதை கண்டு நோட்டம் விட்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 3 1/2 சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசுகள் மற்றும் வீட்டில் இருந்த எல்இடி டிவியையும் திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று வீட்டிற்கு வந்து பார்த்த முத்துமாரி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த நகைகள் மற்றும் எல்இடி டிவி திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக திருச்சுழி காவல் நிலைய போது சாருக்கு தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருச்சுழி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்து தடையங்களை சேகரித்தனர். மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஆளில்லாத வீட்டை நோட்டம் பார்த்து நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News