சுதந்திரதினவிழா கொண்டாட்டம்
குமாரபாளையத்தில் சுதந்திரதினவிழா கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையத்தில் சுதந்திரதினவிழா நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தேசியக்கொடி ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். சுதந்திர போராட்ட தியாகிகள் குடும்பத்தார் கவுரவிக்கப்பட்டனர். நகராட்சி அலுவலகம் அருகே உள்ள அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. பள்ளியில் தலைமை ஆசிரியை சுகந்தி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் (பொ) சரவனாதேவி, காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தவமணி, தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் சிவகுமார், வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் பி.டி.ஏ. தலைவர் காந்தி நாச்சிமுத்து, அரசு ஆண்கள் மெல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆடலரசு, பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை காந்தரூபி, தேசியக்கொடி ஏற்றி வைத்து வாழ்த்து கூறினார்கள். மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு போட்டிகள் வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. காங்கிரஸ் கட்சி சார்பில் நகர தலைவர் ஜானகிராமன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். சத்யா நகர் அன்னை ஆதரவற்றோர் மையத்தில் தளபதி அரிமா சங்கம் சார்பில் பட்டய தலைவர் ஜெகதீஷ் தலைமையில், தலைவர் சிவராமன் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். செயலர்கள் காயத்ரி, நீலகண்டன், உள்பட பலர் பங்கேற்றனர். ஓலப்பாளையம் பாசம் ஆதரவற்றோர் மையத்தில் அமைப்பாளர் குமார் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டர் பாரதி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.