தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் தசரா திருவிழாவிற்காக ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கியதால் மீன்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டது.;
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில் தசரா திருவிழாவிற்காக ஏராளமானோர் மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கியதால் மீன்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டது சீலா மீன்கள் ஒரு கிலோ 900 ரூபாய் வரையும் ஊழி , பாறை, விளைமீன் ஆகிய மீன்கள் விலை ரூபாய் 300 முதல் 450 ரூபாய் வரை விற்பனை தூத்துக்குடி திரேஸ் புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று சனிக்கிழமை என்பதால் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் மற்றும் பைபர் படகுகள் கரை திரும்பின இதன் காரணமாக மீன்பிடி துறைமுக மீன்கள் விற்பனை செய்யும் ஏல கூடத்தில் மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது இந்நிலையில் மீன்களின் வரத்து அதிகம் காணப்பட்ட நிலையில் தசரா திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தற்போது 40 நாட்கள் 21 நாட்கள் என மாலை அணிந்து விரதம் இருக்க துவங்கியுள்ளதால் மீன்களின் விலை குறைப துவங்கியுள்ளது சீலா மீன் ஒரு கிலோ 800 ரூபாய் முதல் 900 ரூபாய் வரையும் பாறை ஊழி விளைமீன் ஆகிய மீன்கள் கிலோ 300 ரூபாய் முதல் 450 ரூபாய் வரையும் நண்டு ஒரு கிலோ 400 ரூபாய் வரையும் சாலை மீன் ஒரு கூடை 1500 ரூபாய் வரையும் விற்பனையானது இதேபோன்று சூரை, கேரை ஆகிய மீன்கள் கிலோ 150 முதல் 250 ரூபாய் வரை விற்பனையானது மீன்களின் விலை சற்று குறைந்து காணப்பட்டதால் அசைவ பிரியர்கள் மீன்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்