போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க கோரி தேசிய மாதர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்
போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க கோரியும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை, நீட் தேர்வு முறைகேடு ஆகியவற்றை கண்டித்தும் தேசிய மாதர் சம்மேளனத்தினர் (NFIW) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் தேசிய மாதர் சம்மேளனம்(NFIW) மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்(AIYF) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க கோரியும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய வியாபாரிகள் விற்பனைக்கு உடந்தையாக இருந்தவர்ள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேட்டும், தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்கள் கள்ளச்சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வலியுறுத்தியும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குளறுபடி இன்றி நிவாரணம் வழங்க கேட்டும், நீட் தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்தும் நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய பிஜேபி அரசை வலியுறுத்தியும் ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் (NFIW)இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் (AIYF) அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு (NFIW) மாவட்ட செயலாளர் S.மீனா. (AIYF) ராசிபுரம் தாலுகா தலைவர் R.வேம்பு. ஆகியோர் தலைமை வகித்தனர். CPI நகர செயலாளர் S.மணிமாறன்., நகரதுணை செயலாளர் A.J.சாதிக்பாஷா, ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர். முன்னாள் மாநில கட்டுப்பாட்டு குழு S.மணிவேல். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநில செயலாளர் க.பாரதி. இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில துணை செயலாளர் T.P.லலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் T.N.கிருஷ்ணசாமி. அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் K.கணேஷ்குமார், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் P.R.செங்கோட்டுவேல், மாவட்ட நிர்வாக குழு R.செங்கோட்டையன், ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ நகர துணை செயலாளர் A.கிருஷ்னமூர்த்தி, சிபிஐ நகர குழு உறுப்பினர் A.C.ராஜா, NFIW ஒன்றிய துணை செயலாளர் S.மகேஸ்வரி, ஒன்றிய பொருளாளர் தேவி, மற்றும் நிர்வாகிகள் T. நிர்மலா. P. கோமதி. மாதேஸ்வரி, AIYF நிர்வாகிகள் கேசவன், கோபால், மணிகண்டன், பிரபு, முகமது ஸியாத். சிவா. அஜித். சதீஷ். மற்றும் பலர் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.