திருமருகலில் இரவு நேர மருத்துவ பணியாளரை தாக்கியவர்கள் 2 பேர் கைது

நாகை மாவட்டம் திருமருகலில் இரவு நேர மருத்துவ பணியாளரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2024-02-02 13:57 GMT

பைல் படம்

நாகை மாவட்டம் திருமருகலில் இரவு நேர மருத்துவ பணியாளரை தாக்கியவர்கள் 2 பேர் கைது திருமருகலில் தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்உள்ளது.இங்கு கடந்த 31-ம் தேதி இரவு மருத்துவ பணியாளர்கள் தினேஷ் (வயது 35),இளங்குமரன் (35), துப்புரவு பணியாளர் லலிதா (45) ஆகிய 3 பேரும் இரவு நேர பணியில் இருந்துள்ளனர்.

அப்போது நள்ளிரவில் மருங்கூர் வடக்கு தெருவை சேர்ந்த சிவாஜி மனைவி சேர்ந்த ராஜாத்தி என்ற பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என மருத்துவ சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.அங்கு டாக்டர் இல்லாத காரணத்தினால் முதலுதவி செய்துள்ளனர்.

Advertisement

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜாத்தியின் மகன் செந்தூரபாண்டி (வயது 29) மற்றும் அவரின் உறவினர் மருங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சேர்ந்த மகாலிங்கம் மகன் ஜெகதீஷ் சந்திரபோஸ் (வயது 28) ஆகிய இருவரும் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் இல்லை என்றால் எதற்கு ஆஸ்பத்திரி என்று பணியில் இருந்த தினேஷ், இளங்குமரன்,லலிதா ஆகிய 3 பேரையும் தாக்கினர்.இதில் காயம் அடைந்த தினேஷ் நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார்.இதுகுறித்து தினேஷ் கொடுத்த புகாரின் பெயரில் திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து செந்தூரப்பாண்டி,ஜெகதீஷ் சந்திரபோஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News