மேலப்பாளையத்தில் இரவு நேர தெருமுனை பிரச்சாரம்
மேலப்பாளையத்தில் இரவு நேர தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-16 10:06 GMT
தெருமுனை பிரச்சாரத்தில் பங்கேற்றவர்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலப்பாளையம் மஸ்ஜிதுஸ் ஸலாம் கிளையின் சார்பாக நேற்று இரவு தெருமுனை பிரச்சாரம் ஹாமீம்புரம் 1 மற்றும் 2வது தெருக்களில் நடைபெற்றது. இதில் கிளை பேச்சாளர் ரம்ஜான் அலி பங்கேற்று படைத்தவனை மட்டும் வணங்குவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இதற்கான ஏற்பாட்டினை மஸ்ஜிதுஸ் ஸலாம் கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர். இந்த பிரச்சாரத்தின் போது மேலப்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினர் உடன் இருந்தனர்.