நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் !

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இந்தியா கூட்டணி நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் மாவட்ட செயலாளர் முபாரக் தலைமையில் நடந்தது.

Update: 2024-04-01 09:14 GMT

ஆ. ராசா

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இந்தியா கூட்டணி நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் மாவட்ட செயலாளர் முபாரக் தலைமையில் நடந்தது. சுற்றுலாத் துறை அமைச்சர் ராமசந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தி.மு.க., சார்பில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஆ.ராசா பேசுகையில்,  நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சாதி, மத சண்டைகள் இல்லாமல் அமைதியாக உள்ளது. 2009ம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக பணியாற்றினேன். 2014ம் ஆண்டு நான் தோல்வி அடைந்தாலும் தொகுதி மக்களுக்காக பணியாற்றினேன். 2019ல் மீண்டும் என்னை வெற்றி பெற செய்தீர்கள் அதற்காக தொகுதி மக்களுக்காக பணியாற்றி இருக்கிறேன். இந்த தொகுதியில் மீண்டும் நான் வெற்றி பெற வேண்டும் என்பதில்லை. தமிழ்நாடு மற்றும் அல்ல இந்தியா முழுவதும் யார் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தேர்தல். கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்தி இரத்த ஆறு ஒட விட்டு அதில் ஒட்டு வாங்கி திரும்பவும் பிரதமாக நினைத்தால் குன்னூர் மட்டும் அல்ல தமிழ் நாடே எதிர்க்கும்,என்றார்.
Tags:    

Similar News