உதகை : சட்டம் ஒழுங்கு, ரேகிங் எதிர்ப்பு விழிப்புணர்வு கூட்டம்
நீலகிரியில் சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, ரேகிங் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.
By : King Editorial 24x7
Update: 2023-10-27 14:06 GMT
நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, ரேகிங் எதிர்ப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் ரேகிங் புகார்கள் பெறப்படும் வகையில் புகார் பெட்டிகள் மாணவ, மாணவியர்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும். அதேபோல் மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து, ரேகிங் நடந்தால், அது தொடர்பான புகார்கள் அளிக்க தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் அரசு தங்கும் விடுதிகளில், சம்மந்தப்பட்ட வார்டன்கள் ரேகிங் தொடர்பான நிகழ்வுகள் ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரேகிங் ஏற்படாமல் இருக்க மாதந்தோறும் மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.கீர்த்தி பிரியதர்சினி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சௌந்திரராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.தனப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர்கள் திரு.மகராஜ் (உதகை), திரு.பூஷணகுமார் (குன்னூர்), திரு.முகமது குதரதுல்லா (கூடலூர்), வட்டாட்சியர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.