சமூக வலைதளத்தில் வரும் செய்தி உண்மையா என கொள்ளனுமா ..!

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தியின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய 9789800100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.;

Update: 2024-03-07 13:34 GMT

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர் சந்திப்பு

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தி தொடர்பான உண்மை தன்மையை உறுதி செய்யாமல் அதைத் தொடர்ந்து பகிர்வதும், அவை உண்மையென நம்பிக் கொண்டு ஒரு சிலர் சட்டத்தை கையில் எடுத்து குற்றச்செயலில் ஈடுபடாத நபர்களின் மீது தாக்குதல் நடத்துவது மாநிலத்தின் ஒரு சில இடங்களில் நடைபெறுகிறது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல், சமூக வலைத்தளங்களை பதிவிடப்படக் கூடிய செய்தியின் உண்மைத் தன்மையை உணர்ந்து அதனை பகிர வேண்டும். பகிரப்படும் செய்தியின் உண்மை தன்மை குறித்து சந்தேகம் இருந்தால் காவல்துறையை உடனடியாக தொடர்புக் கொள்ளலாம். காவல்துறை எந்த நேரத்திலும் அதனுடைய உண்மை தன்மையை தெரிவிப்பதற்கு தயாராக உள்ளது.

Advertisement

சந்தேகத்திற்கு உரிய தகவல்களை உண்மைத்தன்மை அறியாமல் அதை நம்பி, சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு சம்பவத்திற்கு தொடர்பில்லாத நபர்களை தாக்குவது தவறான செயல். உண்மையிலேயே ஒரு நபர் குற்றம் செய்திருந்தாலும் கூட அவரை காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 12,000 வெளி மாநிலத்தவர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் சந்தேகத்திற்குரிய செய்திகள் குறித்த உண்மைத் தன்மையை தெரிந்துகொள்ளவும், சந்தோகத்திற்குரிய நபர்கள் மீது புகாரளிக்கவும் 9789800100 என்ற எண்ணில் 24 மணி நேரமும் பொதுமக்களை தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.

Tags:    

Similar News