சேலத்தில் நேற்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை

சேலத்தில் 3வது நாளான நேற்று இன்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

Update: 2024-03-23 06:44 GMT

சேலத்தில் 3வது நாளான நேற்று இன்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.  

 சேலத்தில் 3வது நாளான நேற்று இன்று யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் தேதியை கடந்த 16-ந் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி 7 கட்டங்களாக நடைபெறும் என்றும், தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் மாதம் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவித்தது. 20-ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுபவர்கள் கலெக்டர் அலுவலகம், சூரமங்கலத்தில் உள்ள மேற்கு தாலுகா அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கலின் முதல் நாளான கடந்த 20-ந்தேதி சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த முகமது சான்பாஷா பிஸ்மில்லா மக்கள் கட்சி சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

2- வது நாளான நேற்று முன்தினம் சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நாள் முதல் கலெக்டர் அலுவலகம் மற்றும் சேலம் மேற்கு தாலுகா அலுவலகங்களில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. 3-வது நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெறும் 2 இடங்களிலும் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அலுவலர்களும் தயார் நிலையில் இருந்தனர்.

ஆனால் நேற்று மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. அதன்படி 3-வது நாளான நேற்று சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வில்லை. 27-ந்தேதி (புதன்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும்.

Tags:    

Similar News