முதல்வர் செயல்படுத்திய திட்டங்கள் போல் எந்தமாநிலமும் செயல்படுத்தியதில்லை

தமிழக முதல்வர் செயல்படுத்திய திட்டங்கள் போல் வேறு எந்த மாநிலமும் செயல்படுத்தியதில்லை என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-17 09:20 GMT

அமைச்சர் முத்துசாமி

உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் , பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.

இதில் தமிழக அமைச்சர்கள் முத்துசாமி , மு.பெ.சாமிநாதன் , கயல்விழி செல்வராஜ் மற்றும் சிறப்பு அழைப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் சு.முத்துசாமி , தமிழக முதல்வர் செயல்படுத்திய திட்டங்கள் போல் வேறு எந்த மாநிலமும் செயல்படுத்தியதில்லை என்றும் , நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்றார்.

Tags:    

Similar News