நாமக்கல் நகராட்சியில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு!
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, நாமக்கல் நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
நாமக்கல், நகராட்சி அலுவலகத்தில், உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த உறுதி மொழி நிகழ்வில் "நான் ஒருபோதும் புகை பிடிக்கவோ அல்லது புகையிலை பொருட்களை யாதொரு வடிவிலும் உட்கொள்ள மாட்டேன் என்றும், அவ்வாறு புகை பிடிப்பதற்கு அல்லது புகையிலை பொருட்களை யாதொரு வடிவிலும் உட்கொள்வதற்கு என்னுடைய உறவினர் அல்லது என்னுடைய நண்பர்களை ஊக்குவிக்க மாட்டேன் என்றும், நான் என்னுடன் பணியாற்றும் சக ஊழியர்களை புகையிலை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க ஊக்குவிப்பேன் என்றும், மேலும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதனால் மாசுபடுவதில் இருந்து எனது சுற்றுச்சூழலை பாதுகாக்க பங்களிப்பேன் என்றும், உறுதியளிக்கிறேன் என்ற உறுதிமொழியை, அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர் சண்முகம், நகராட்சி துப்புரவு அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார்,பாஸ்கரன், களப்பணி உதவியாளர் சபரிநாதன், எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார நல மேற்பார்வையாளர் செல்வகணபதி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் , தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள்,பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.