இன்று வேட்புமனு பரிசீலனை - ஆட்சியர் தகவல்

நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிட 38 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது.

Update: 2024-03-28 05:03 GMT

ஆட்சியர் கார்த்திகேயன் 

நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளவர்களின் மனுக்களின் பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். வேட்பாளர், அவரது முகவர், முன்மொழிந்தவர் ஒருவர் மற்றும் ஒரு நபர் ஆகியோர் மட்டும் அனுமதிக்கப்படுவர். திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு மொத்தம் 38 வேட்பாளர்கள் 53 மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News