தர்மபுரியில் இன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடக்கம் - ஆட்சியர் தகவல்

தர்மபுரியில் இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்குவதையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2024-03-20 03:18 GMT

ஆட்சியர் சாந்தி

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று வேப்பமுனு தாக்கல் துவங்குகிறது தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இன்று முதல் தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வரும்பொழுது இரண்டு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்கள் வருகின்ற வாகனங்கள் நிறுத்தும் இடம் மற்றும் பொதுமக்கள் வருவதற்கும் எல்லை கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை வேட்பு மனு தாக்கல் செய்ய விரும்பு வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News