கிணற்றில் தவறி விழுந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம், சாமிசெட்டிபட்டி பகுதியில் வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-03-01 06:47 GMT
தர்மபுரி மாவட்டம், மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி அருகே சாமிசெட்டிபட்டி காசிநகரில் விவசாயி ஒருவரது நிலத்தில் கிணறு அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியில் சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த ராஜி உள்பட 8 பேர் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று ராஜி கிணறு அமைக்கும் பகுதிக்கு அருகே சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவர் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தொப்பூர் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு பணி வீரர்கள் கிணற்றில் இருந்துராஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தொப்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.