வட மாநில போலீசார் விபத்தில் உயிரிழப்பு !
பெரம்பலூர் மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்த வட மாநில போலீசார் வாகன விபத்தில், சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு போலீசார் விசாரணை.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்த வட மாநில போலீசார் வாகன விபத்தில், சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு போலீசார் விசாரணை. பெரம்பலூர் பாராளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஒடிசா மாநிலத்தில் இருந்து காவலர்கள் பெரம்பலூர் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை தண்ணீர் பந்தல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் தங்கி உள்ளனர்.
இதில் ஒடிசா மாநிலம், நூகபடா மாவட்டத்தை சேர்ந்த புருஷோத்தம் மகன் காவலர் புரமோத் குமார் வயது 35 என்பவர் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி பொருட்கள் வாங்க பெரம்பலூர் நகரத்திற்கு வந்துவிட்டு மீண்டும் தண்ணீர் பந்தலில் உள்ள ரோவர் கல்லூரிக்கு தங்குவதற்கு பேருந்தில் சென்று இறங்கி நடந்து வரும் பொழுது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், மங்களம் கேகே நகர், பகுதியைச் சேர்ந்த சுருளிராஜன் மகன் சக்திவேல் வயது -32 என்பவர் புரமோத் குமார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காயமடைந்த புரமோத் குமார் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார், இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.