திருட்டு மின்சாரத்தில் டைல்ஸ் ஒட்டும் பணிகள் : மின்சாரம் தாக்கி வட மாநில வாலிபர் உயிரிழப்பு

தேன்கனிக்கோட்டையில் திருட்டு மின்சாரத்தை எடுத்து டைல்ஸ் ஒட்டும் பணிகள் நடந்தபோது மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-01-22 03:11 GMT

மத்திய பிரதேசம் மாநிலம் சியோப்பூர் மாவட்டம் பிஜ்புரி கிராமத்தை சேர்ந்த ராமநிவாஸ் என்பவரின் மகன் ராகுல் (24) இவரும் மனிஷ் குமார் என்பவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதிகளில் வீடுகளுக்கு டைல்ஸ் ஒட்டும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில்,தேன்கனிக்கோட்டை ஹனிவே லேஅவுட் என்ற குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணியில் ராகுல் ஈடுபட்டிருந்தார். அப்போது டைல்ஸ் கற்களை அறுக்கும் மிஷினை ஸ்டார்ட் செய்ய அவர் மிஷின் ஒயரை மின்சார பிளக்கில் சொருகி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அவர் தூக்கி வீசப்பட்டார்.

இதனையடுத்து, அருகில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.அப்போது வீட்டில் டைல்ஸ் கற்களை ஒட்டும் பணிகளுக்கு தெருவில் இருந்த மின்சார கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக மின்சாரத்தை எடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News