திருவட்டார் பகுதியில் மின் தடை அறிவிப்பு

நாளை திருவட்டார் சுற்றுவட்டார பகுதியில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்படுள்ளது.

Update: 2024-04-28 11:33 GMT

மின் தடை

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கிளைகள் வெட்டி அகற்றும் பணிகள் மற்றும் அவசர பராமரிப்பு பணிகள் நடப்பதால் 29ம் தேதி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஏற்றகோடு ஏ,பி சுவிட்ச் முதல் ஆனையடி, குமரன்குடி, வடக்கநாடு, முதலார் மற்றும் அதனை சுற்றியுள்ள துணை கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது. இதேப்போல் மே 2ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை முள்ளுவிளை, தேமானூர், தோட்ட வாரம், மூவாற்றுமுகம் மற்றும் அதனை சுற்றியுள்ள துணை கிராமங்களுக்கும் வினியோகம் மின் இருக்காது என குலசேகரம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இன்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News