மாரண்டஅள்ளி பேரூராட்சியில் நிலவை கட்டங்களை செலுத்த அறிவிப்பு

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் நிலுவை கட்டணங்களை செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-09 13:12 GMT

பேரூராட்சி அலுவலகம்

மாரண்டஅள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் குமுதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மாரண்டஅள்ளி பேரூராட்சி பொதுமக்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி செலுத்தப்படாமல் உள்ளது. எனவே பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை உடனடியாக அலுவலகத்தில் செலுத்தி ரசீதை பெற்று கொள்ள வேண்டும்.

மேலும் பிரதி மாதம் 5-ந் தேதிக்குள் செலுத்தவேண்டிய குடிநீர் கட்டணம் இதுநாள் வரை செலுத்தாமல் உள்ளது. எனவே பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி மற்றும் கடை வாடகையை உடனடியாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் எந்த முன்னறிவிப்பின்றி குடிநீர் இணைப்பை துண்டிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொது மக்கள் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள வரியினங்களை செலுத்தி உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கோடை காலம் வர இருப்பதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News