திருப்பூரில் சாயக் கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்துக்கு நோட்டீஸ்
திருப்பூரில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூரில் சாயக் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்துக்கு நோட்டீஸ் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை! திருப்பூர் எஸ் பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு மையத்தில் சாயக்கழிவுகளை சுத்திகரிப்பு பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
சுத்தகரிப்புக்கான தொகையை வழங்காமல் சுத்திகரிப்பு மைய நிர்வாகம் நிலுவை வைத்துள்ளதாக தெரிகிறது. இநதனையடுத்து தனியார் நிறுவனம் கடந்த 15 நாட்களாக சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பை நிறுத்தி வைத்துள்ளது.
சுத்திகரிப்பு பணி நிறுத்தப்பட்டது குறித்து எஸ் பெரியபாளையம் சுத்திகரிப்பு மைய நிர்வாகம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல்தெரிவிக்கவில்லை. ஒரு சாயலை மட்டும் விதிகளை மீறி இயங்கி சாயக்கழிவு நீரை சேமித்து வைத்துள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எஸ் பெரியபாளையம் சுத்திகரிப்பு மையம் மற்றும் சாய ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். விதிமுறைகள் உறுதியானதையடுத்து உரிய விளக்கம் அளிக்குமாறு எஸ் பெரியபாளையம் சுத்திகரிப்புமையம் மற்றும் சாய ஆலைகளுக்கு நோட்டீஸ் அளித்துள்ளனர்.