மக்களுடன்முதல்வர் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

மக்களுடன்முதல்வர் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.;

Update: 2023-12-18 16:26 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ள “மக்களுடன்முதல்வர்” என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் 18.12.2023 முதல் 06.01.2024 வரை 50 இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை முகாம்கள் நடைபெறவுள்ளது. கரூர் மாநகராட்சியில் 16 நாட்களில் 16 இடங்களிலும், 3 நகராட்சிகளில் 9 நாட்களில் 13 இடங்களிலும், 8 பேரூராட்சிகளில் 7 நாட்களில், 16 இடங்களிலும், மாநகராட்சி ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளில் 5 நாட்களில் 5 இடங்களிலும் நடைபெறுகிறது.

Advertisement

19.12.2023 அன்று கரூர் மாநகராட்சியில் எஸ்.கே.டி மஹாலில், வார்டு எண்.1,2,28-ற்க்கும், பள்ளப்பட்டி நகராட்சியில் ஆசிய மஹாலில் வார்டு எண்கள்.8,13,14,15,21-லிலும், கருப்பம்பாளையம் ஊராட்சியில் உள்ள ஏ.கே.பாரதிநகர் சமுதாய கூடத்திலும் "மக்களுடன் முதல்வர்" சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

மேலும்,இச்சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் பொது மக்கள் தங்களது பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில், குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில், தங்களது கோரிக்கை தொடர்பாக மனு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News