மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீடு அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வீடு கட்ட இடமிருந்து வீடு கட்ட முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் இலவச வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Update: 2024-05-13 14:06 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் வீடு கட்ட இடமிருந்து வீடு கட்ட முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசால் இலவச வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் இம்மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஆதார், குடும்ப அட்டை, பட்டா அல்லது பத்திர நகல், வங்கிப் புத்தகம் நகல் ஆகியவற்றுடன் மாற்றுத்திறனாளி அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.