நாட்டு நலப்பணி திட்டம்
தென்காசி மாவட்டம், கீழப்பாவூரில் நல்லூர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், நல்லூர் சி. எஸ். ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் ஆலங்குளம் அருகே கீழப்பாவூரில் நடைபெற்று வருகிறது. 7 நாட்கள் நடைபெறும் இம்முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் மற்றும் தாளாளர் ஜேசுஜெகன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர் பி. எம். எஸ். ராஜன், துணை த்தலைவர் ராஜசேகர், செயல் அலுவலர் மாணிக்கராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன். அறிவழகன், இலக்கிய மன்ற தலைவர் செல்வன், முன்னாள் துணைத் தலைவர் தங்கச்சாமி, மாவட்ட திமுக பிரதிநிதி பொன்செல்வன், கண் தான விழிப்புணர்வு குழு தலைவர் கே.ஆர். பி.இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நேற்று 2வது நாள் ஊரணி பகுதியில் நடைபெற்ற களப்பணியினை பேரூராட்சி தலைவர் பி. எம். எஸ். ராஜன் தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் ராஜசேகர், வக்கீல் அரவிந்த் மணிராஜ், பேரூர் திமுக பொருளாளர் தெய்வேந்திரன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன், கல்லூரி முதல்வர் வில்சன், நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் ஜெயடேவிசன் இம்மானுவேல், உடற்கல்வி மற்றும் ரத்த தான கழக இயக்குனர் ஜுலியன்ஸ் ராஜாசிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.