நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் ?

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் இன்று வேட்பு மனு இன்று தாக்கல் செய்தார்.

Update: 2024-03-26 10:17 GMT
நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் சுற்றுலா பயணிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் ஊட்டியில் பேட்டியளித்தார். முன்னதாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நாம் தமிழர் கட்சியினர் ஊட்டி அருகே உள்ள லவ்டேல் சந்திப்பில் இருந்து ஊட்டி நகரத்திற்கு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வேட்பாளருடன் வருகை புரிந்தனர். உதகை காஃபி ஹவுஸ் சந்திப்பிற்கு வருகை புரிந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமாருக்கு காய்கறிகளை கொண்டு மாலை அணிவித்தும், கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகளை சீர்வரிசையாக கொடுத்தும் நாம் தமிழர் கட்சியினர் உற்சாகமாக வரவேற்றனர். காஃபி ஹவுஸ் சந்திப்பில் இருந்து கட்சி தொண்டர்கள் மத்தியில் வேட்பாளர் ஜெயக்குமார் பேண்ட் வாத்தியங்களுக்கு உற்சாகமாக குத்தாட்டம் ஆடி வேட்பு மனு தாக்கல் செய்தார். செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமார் பேசுகையில்," நீலகிரியில் சுற்றுலா தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், மதிப்பு கூட்டப்பட்ட காய்கறிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். டேன் டீ தேயிலை தொழிற்சாலை தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். நீலகிரியில் அதிகரித்து வரும் மனித வனவிலங்குகள் மோதலை கட்டுப்படுத்த வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு தேவையை பூர்த்தி செய்யப்படும். மேலும் சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு தடை விதித்தது வரவேற்க்கத்தக்கது. ஆனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய ஆளும், ஆண்ட கட்சிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனை நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்றால் சுற்றுலா பயணிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,"என்றார்.
Tags:    

Similar News