திருப்பூரில் பாடையை வைத்து நூதனன பிரச்சாரம்
திருப்பூர் தொழிலை பாடையில் ஏற்றிய மோடிக்கா உங்கள் வாக்கு என நவீன மனிதர்கள் திருப்பூர் மாநகராட்சி முன்பு பாடையை வைத்து நூர்தன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் தொழிலை பாடையில் ஏற்றிய மோடிக்கா உங்கள் வாக்கு என நவீன மனிதர்கள் திருப்பூர் மாநகராட்சி முன்பு பாடையை வைத்து நூதன பிரச்சாரம். தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடப்பதை ஒட்டி பல்வேறு அமைப்பினர் அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் திருப்பூரில் புதிதாக நவீன மனிதர்கள் என்ற அமைப்பினர் போதும் மோடி பைபை மோடி என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நூதனமான முறையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திருப்பூர் தொழிலை பாடையில் ஏற்றிய மோடிக்கா உங்களது வாக்கு என பதாகைகளை ஏந்தி, மக்கள் மத்தியில் நூதன பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.
இந்த பிரச்சாரத்தின் இடையே திருப்பூர் தொழில் பாடையில் ஏற்றப்பட்டதை காட்டும் விதமாக, ஒரு பொம்மை பாடியில் படுத்திருப்பது போன்று எடுத்து வந்து அதனை மக்கள் மத்தியில் கிட்ட முயற்சி செய்தனர் ஆனால் போலீசார் அதற்கு அனுமதி அளிக்கவில்லை இருப்பினும் நவீன மனிதர்கள் அமைப்பினர் அந்த பாடையை அதிலிருந்து இறக்க முயற்சித்த போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அந்த பாடையை பிடிங்கி சென்றனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் பாரதி சுப்பராயன் கூறுகையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த 10 வருடத்தில் திருப்பூர் பின்னலாடை துறை நவீன் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .
பங்களாதேஷில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டதால், சிறு குறு தொழில் நிறுவனங்கள் முற்றிலுமாக முடங்கி விட்டது. 2017 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 8500 கோடிக்கு ஆடையை இறந்து கொண்டிருக்கிற அனைத்தும் இங்கு திருப்பூரில் தயாரிக்கப்பட வேண்டியவை. குஜராத் காட்டன் மொத்த வியாபாரிகளை காப்பாற்றுவதற்காக, பருத்தி இறக்குமதிக்கு வரி விதிப்பை செய்துள்ளார்.
பல்வேறு காரணங்களால் திருப்பூர் தொழில் நசுக்கு பாடையில் ஏற்றப்படும் ஊழல் உருவாகியுள்ளது என்றார்.