வேலூரில் எண்ணும் எழுத்தும் திட்டம் சார் முதன்மை கருத்தாளர் பயிற்சி

Update: 2023-12-10 05:50 GMT

எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 வேலூர் மாவட்டம் 1 முதல் 5 வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும்( மூன்றாம் பருவம்) குறித்து நான்கு நாட்கள் பயிற்சி ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,  இராணிப்பேட்டை முதல்வர் (பொ) டாக்டர் மணி துவக்கி வைத்தார் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆசிரியர்கள் வகுப்பறையில் எண்ணும் எழுத்தும் எழுத்தும் திட்டத்தினை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்தும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் சகோதரி லில்லி கிரேஸ் ஆசிரியர்களுக்கு வாழ்த்துரை வழங்கி எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து சிறப்புரையாற்றினார். மேலும் மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் சார்ந்த முக்கியத்துவம் குறித்தும் கற்றல் கற்பித்தல் நிகழ்வில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் முக்கிய பங்கினை குறித்தும் ஆசிரியர்களுக்கு எடுத்துரைத்தார். பயிற்சியில் வேலூர் மாவட்டத்தை சார்ந்த 8 ஒன்றியங்களில் இருந்து 120 ஆசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
Tags:    

Similar News